ஞாயிறு, 30 நவம்பர், 2014

ஆதி ஜோதியே ஆன்ம ஞானமே!


உயிரெனும் உடலெனும் உணர்வுகள் கடந்தபின்
நான்முகன் யாரடா சயனன்தான் யாரடா
ஆதியும் அந்தமும் அறிந்திலா ஜோதியை
அறிந்திடும் வழியை நான் அறிகிலேன் அறிகிலேன்.
அறியும்முன் பிரியுமோ ஆவிதான் உடல்தனை.
அறிந்திடும்  முயற்சிதான் மடமை என்றாகுமோ.
விதிப்பவன் வகுப்பவன் கதியை நான் அடைந்திட்டால்
கிட்டுமோ சூட்சமம் ஜோதியின் நாதம்தான்.
உள்ளிலே இருப்பதை உணர்வுகள் உணர்ந்தபின்
கல்லிலும் காண்கிறேன் நாதன்தன் ஜோதியை.
கல்லிலே காண்பது பக்தியின்  முதல்நிலை,
கல்லிலே கண்டதை உன் உள்ளிலே தேடினால்
உள்ளமும் உணருமே கல்லதன்  சங்கதி.
கல்லதன் சங்கதி உள்ளமும் உணர்ந்தபின்
செல்லுமே உள்ளம்தான் முக்கிதியின் முதல்படி.
பக்தியும் முக்தியும் மனிதன்தான் அறிந்திட
சாட்சியாய் இருந்தவன் ஆதியான ஜோதியே.
அனைவரும் அனைத்தையும் உணர்ந்திட  இயலுமோ
உணர்கையில் உலகதில் ஜோதியாய் நீயுமே. 

கருத்துகள் இல்லை: