வெள்ளி, 31 ஜூலை, 2009

கல்வெட்டு


மழை சாரலில்
கரும்பலகை எழுத்துக்கள்
கரைந்தோடலாம்,
கல்வெட்டுக்கள் கரைவதில்லை,
அவை ஒவ்வொரு மழையிலும் புதுபிக்கப்படும்..
நம் நட்பு ஓர் கல்வெட்டு,
இனிவரும் காலங்களில்
நம் நினைவுத்தூரல்கள்
அதை புதுப்பிக்கட்டும்..

1 கருத்து:

arun bharathi சொன்னது…

நண்பருக்கு வணக்கம், கவிதை அருமையாக இருக்கிறது என்பதை விட உணர்வுப்பூர்வமாக இருக்கிறது என்பதே பொருந்திப் போகும். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். வலைத்தள வடிவமைப்பைப் பொருத்த அளவில் கத்துக்குட்டி என்ற நிலையைக் கூட நான் இன்னும் எட்டிப்பிடிக்கவில்லை. தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆசை உங்களுடையதைப் படித்ததும் இன்னும் அதிகமாகி விட்டது. வாழ்த்துக்கள்.