திங்கள், 10 நவம்பர், 2014













ஒவ்வொரு நாளும்
முயன்று கொண்டிருக்கிறேன்
இன்றிரவேனும்,
உன் நினைவுகள் அற்று
உன் பெயரைக் கூட நினையாமல்
உறங்கிவிட வேண்டுமென்று.
ஆண்டுகள் உருண்டோடியதே தவிர
உன் நினைவுகள் துளியேனும்
குறைந்ததாய் தெரியவில்லை...
ஆறுகள் அனைத்தும் வறண்ட பின்னரும்
துளிகூட குறைந்ததாய்
தெரியாத கடலினைப் போல்,
நீ விட்டுச் சென்று
வருடங்கள் உருண்டோடியும்,
வாஞ்சையாய் வருடிவிடும்
நின் நினைவலைகள்
என் நெஞ்சக் கடலில் குறைந்தபாடில்லை.
நீ எங்கிருக்கிறாய்,
என்றேனும் என்னை நினைப்பாயா
என்றெதுவும் எனக்கு தேவைகளற்றது.
இதோ இன்றும் உறங்கக் செல்கிறேன்
உன் நினைவுகளோடு மட்டும்.
எழும்போதும் எனக்கு முன் எழுந்து
என் தலை வருடி நிற்கும்
உன் நினைவுகள்.
இது போதும், இந்த காதல் மட்டும் போதும்,
நீ விட்டுச் சென்ற காதலே போதும்.
காலம் உள்ளவரை என்னை இட்டுச் செல்ல.

:- கௌதமன் ராஜகோபால்..

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

Visit : http://blogintamil.blogspot.in/2014/11/dh.html