வெள்ளி, 31 ஜூலை, 2009

தேடல். . .


சில நொடிகள்
உன் விழி பார்த்துவிட்டதால்,
சில நிமிடங்கள்
நினைவிழந்தேன்,
மணிக்கணக்கில்
உன்னை மட்டுமே சிந்தித்தேன்,
வாரங்களை வீணாக்கி,
மாதங்களாய் மனம் வாடி,
வருடங்களின் வருடலில்
மனம் மாறி
மணம் முடிக்க பெண் பார்த்த வேளை
அங்கு மணமகளாய் நீ. . .
மகிழ்ந்தேன். .
மனமெங்கும் மீண்டும்
உன் நினைவுகளால் நிரப்பினேன். .
ஆனால்,
சதிகாரர்கள்
ஜாதகம் சரியில்லையாம். . .
மனநிலை சரியில்லாதவர்கள். . .
மாற்றுகிறார்களாம் பெண்ணை. . .
இதோ. . .
நான் மீண்டும்
வருடங்களின் வருடல்களைத் தேடி. . .

கல்வெட்டு


மழை சாரலில்
கரும்பலகை எழுத்துக்கள்
கரைந்தோடலாம்,
கல்வெட்டுக்கள் கரைவதில்லை,
அவை ஒவ்வொரு மழையிலும் புதுபிக்கப்படும்..
நம் நட்பு ஓர் கல்வெட்டு,
இனிவரும் காலங்களில்
நம் நினைவுத்தூரல்கள்
அதை புதுப்பிக்கட்டும்..

ஞாயிறு, 26 ஜூலை, 2009

காணல்(காதல்)


நீ என்னவள் என்ற
திகைப்பில் அனுதினமும்,
அது மறுதலிக்கப்பட
வெகுநாட்கள் இல்லை என்பதை மறந்து.

சனி, 25 ஜூலை, 2009

கவிதை!!


கவிதைகள் ரசனைக்குரியவை,
ரசிகையாய் இரு,
அதன் உட்பொருள் தேடாதே,
உன் தேடல் சில கண்ணீர் துளிகளில்
முடிந்துவிடக் கூடும்.

போய் வா நட்பே!!


வாழ்க்கை உனை அழைக்கிறது,
உனைப்பிரிய உடன்பாடில்லை என்றாலும்
உண்மை உணர்கிறேன்!!
போய் வா நட்பே!!
நிஜத்தில் நீ எங்கிருந்தாலும்
நினைவுகளில் என்றென்றும்
என்னுள் நீ!!!...

இதயத்தோழன்


கடல் கடந்து சென்றுவிட்டாய் நீ..
கடல் அளவு அழுதுவிட்டேன் நானும்..
உடல் இடம் மாறியிருக்கலாம்,
இதயம் இனம் மாறவில்லை..
இன்றும் என்னுயிரில் நீ..,
உன்னுயிரில் நான்..,
நாம் வாழும் தூரம் கூடிவிட்டாலும்
நம் இதயங்கள் கட்டிக்கொண்டதாய் ஓர் உணர்வு...
வாழ்ந்து விடுவேன் இப்படியே..,
நீ வரும்வரை என் வாழ்க்கையை!!!

கவிஞனின் கண்ணீர் !!!


சோகத்தின் வெளிப்பாடு
கண்ணீர் என்பது நாமறிவோம்
ஏன் அதிகபட்ச சந்தோசத்தின்
வெளிப்பாடு கூட கண்ணீர்தான்!
கவிஞனின் அத்தனை உணர்வுகளிலும்
தீரப்போவது கண்ணீர் மட்டுமல்ல,
சில வெள்ளை காகிதங்களும்
சற்றே மையும்தான்..
மனதின் பாரம் குறையும்போது
தாள்கள் நிறைந்திருக்கும்
கவிதைகளால்...
(கிறுக்கல்களால்)...

என்செய்வேன் சகியே!!!


உன் விழி பேசும் மொழி பார்த்து
இதழ்கள் சிரிக்கும்,
உன் இதழ் பேசா மொழிக்காக
கண்கள் கலங்கும்..
உன்னால் என் உடல் உறுப்புகளுக்குள்
மாபெரும் யுத்தம்..
என்ன செய்வேன் நான்???

வெள்ளி, 24 ஜூலை, 2009

வரமான நட்பு!


அந்நாட்களில் மக்கள்
கடுந்தவம் செய்தார்களாம்
வரங்களைப்பெற...,
என்ன தவம் செய்தேன் நான்
உன்னுடனான இந்த நட்பைப்பெற..

உன்னோடு நான்!!!


மழையில்லா காலங்களில்
மரங்களெல்லாம் இலைகள்
இல்லாமல் போய்விடுமே,
அதுபோல்தான்
நீ இல்லாத இந்த நாட்களில்
என் நினைவுகள் இங்கில்லாமலே
போய்விட்டேன் நானும்...

கனவென்றுதானிருந்தேன்!



நேற்றிரவு உறக்கத்தில் உன்னுருவம்....
கனவென்றுதான் நினைத்திருந்தேன்,
காலையில் கண்ணிமைக்கும் போதும்
உன்னுருவம் காணும்வரை...
இதயத்தில் இருந்தது போதுமென்று
இமைகளிலும் பதிந்துவிட்டயா!!

மௌணம் தவிர்!



நான் தனித்திருக்கும் போது
துணையாகிறாய்...
உடனிருக்கும் போது மட்டும்
ஊமையகிறாய்..
உன் விழி பேசும்
மொழி கூட அழகுதான்,
அதற்காக, நான் உன்
குரல் கேட்கும் வாய்ப்பை மறுக்காதே.

காதல்பூங்கா!


உனக்காக பூத்துக்குலுங்கும்
என் இதயப்பூங்காவில்
நீ பூப்பறிக்க வேண்டாம்..
உன் கால் பதித்துவிட்டுப் போ!
நீ தடம் பதித்த பாதையில்
நடைபயின்று வந்து
உன் மடி சேரும்
என் இதயப்பூக்கள்...

கனவு!


இரவெல்லாம் ரோஜா
மொட்டுகள் மீது நடை பயில்கிறேன் ,
நாளைய பகலில் மீண்டும்
என் பாதம் தைக்கப்போகும்
முட்களின் மூர்க்கம் மறந்து...

காதல் மனம்!


பயணத்தின் தொடக்கத்தில்
உன்னை தொலைத்துவிட்டு
போகும் இடமெல்லாம்
உன்னை மட்டுமே தேடி அலையும்
முட்டாள் மனம் என்னுடையது..
என்ன சொல்வது அதனிடம்!!???
உன்னை விரும்பிய மனமாயிற்றே!!!