திங்கள், 26 அக்டோபர், 2009
நிசப்தமாய் ஒரு சப்தம்!!
நீ எனக்காக மட்டுமே அனுதினம்
காத்திருக்கிறாய் என்றறிந்தும்
உனைக் கடக்கும் போதெல்லாம்
ஒரு பார்வை கூடப் பாராமல்
கடந்து சென்று கொண்டிருக்கும்
எனைப் பற்றி உன் நண்பர்கள்
திமிர்பிடித்தவள் என்று கூறும் போதெல்லாம்
அவர்களைக் கடிந்து கொண்டு
அவள் என் தேவதை என்பாயே!
ஐயோ, அப்பொழுதெல்லாம்
ஓடி வந்து அப்படியே உனை
அணைத்துக் கொள்ள துடிக்கும் என் இதயம்...
என்ன செய்வேன் நான்,
எனக்காகக் காத்திருக்கும்
உனை ஏறிட்டுப் பார்க்கவே
என் பெண்மையோடு யுத்தம்
நடத்த வேண்டியிருக்கும்போது
உனை அணைப்பதேது????
நான் உனைப் பாராமல்
போவது மட்டுமே அறிந்திருப்பாய் நீ...
நீ வழக்கமாக நிற்கும்
இடத்தில் உனைக் காணா நாட்களில்
என் மனம் படும் ரணம்தனை
என் கண் வழி கண்டதில்லை நீ...
உன் காதல் கடற்கரை மீது
அலை கொண்ட காதலென்றால்,
என் காதலோ சூரியன் மீது
தாமரை கொண்டது போல் சலனமற்றது...
காதலில் காத்திருப்பது சுகம்தான்,
காக்கவைப்பது மிகக் கொடுமை...
தயவு செய்து காதலை சொல்லிவிடேன்..,
என் மனதுக்கும் பெண்மைக்குமான
போராட்டம் சற்றே ஓயட்டும்..
நின் சப்தம் கொண்டு
என் நிசப்தம் களைவாயா காதலா!!!
சனி, 5 செப்டம்பர், 2009
காதலாகி!!!
காதலாகி கசிந்துருகி கண்ணீர்மல்கி
என்று ஏதோ ஒரு கவிஞன்
கற்பனையில் கரைந்தோடியதெல்லாம்
கற்பனையாகவே கரைந்தோடிவிட்டதோ???
இன்றளவில்,
காதலாகி கற்பமாகி கவலையேபடாமல்
கலைத்துவிட்டு,
கலாச்சாரத்தை துடைத்துவிட்டு
வேறொருவனை மணந்துகொள்ளும்
மானங்கெட்ட சமூகமடா இது...
இதில் நீ காதலியை மட்டுமல்ல
காதலை கூடத் தேடாதே!
அது ஓர் பளிங்குக் கல்லரையில்
பல காலமாய் உறங்கிக்கிடக்கிறது. .
காதலே நீ உறங்கு . . .
உனைத் தாலாட்ட நான் இருக்கிறேன். . .
சனி, 29 ஆகஸ்ட், 2009
இவன்
வெள்ளி, 31 ஜூலை, 2009
தேடல். . .
சில நொடிகள்
உன் விழி பார்த்துவிட்டதால்,
சில நிமிடங்கள்
நினைவிழந்தேன்,
மணிக்கணக்கில்
உன்னை மட்டுமே சிந்தித்தேன்,
வாரங்களை வீணாக்கி,
மாதங்களாய் மனம் வாடி,
வருடங்களின் வருடலில்
மனம் மாறி
மணம் முடிக்க பெண் பார்த்த வேளை
அங்கு மணமகளாய் நீ. . .
மகிழ்ந்தேன். .
மனமெங்கும் மீண்டும்
உன் நினைவுகளால் நிரப்பினேன். .
ஆனால்,
சதிகாரர்கள்
ஜாதகம் சரியில்லையாம். . .
மனநிலை சரியில்லாதவர்கள். . .
மாற்றுகிறார்களாம் பெண்ணை. . .
இதோ. . .
நான் மீண்டும்
வருடங்களின் வருடல்களைத் தேடி. . .
கல்வெட்டு
ஞாயிறு, 26 ஜூலை, 2009
சனி, 25 ஜூலை, 2009
கவிதை!!
போய் வா நட்பே!!
இதயத்தோழன்
கவிஞனின் கண்ணீர் !!!
என்செய்வேன் சகியே!!!
வெள்ளி, 24 ஜூலை, 2009
வரமான நட்பு!
உன்னோடு நான்!!!
கனவென்றுதானிருந்தேன்!
மௌணம் தவிர்!
காதல்பூங்கா!
கனவு!
காதல் மனம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)