ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

பெண்...





















தமிழில் இது வெறும் வார்த்தை அல்ல

தமிழ் படைத்தோன்

அறிந்த பெண்ணின் பெருமை.

ஆண் வெறும் உயிரும் மெய்யும் தான்.

அவன் மெய் உயிர் சுமப்பதில்லை.

ஆனால் பெண்ணிற்கு அது போதாதே!

மனித சமுதாயத்தின் கருப்பை அல்லவா அவள்.

பிறப்பெடுக்கும் பொழுதே தன் மெய்யில்

உயிர் சுமக்கும் உரிமை பெற்றவள் அவள்.

அதனால்தான் அவள் "பெண்".

உயிர்மெய்யுடன் மெய் கலந்தவள்.

மனிதம் மலர பெண்தான் ஆதாரம்.

மனிதம் வளர பெண்தான் வலிமை.

மனிதம் உயர பெண்மை காப்போம். 

பெண்மை போற்றுதும்.

பெண்மை போற்றுதும்.

உயிர் உள்ள வரை 

"உன் மெய்" போற்றுதும்.

உன் மெய் என்பதும்

ஒரு பெண்ணின் உதிரம்.

உண்மை அறிந்தோர்

பெண்மை போற்றுதும்.

உண்மை மறந்தோர்

உன் மெய் உணர்வீர்.

என் வாழ்வில் நான் அறிந்த

எல்லா பெண்களுக்கும் சமர்ப்பணம்...

கருத்துகள் இல்லை: