வனப்பு மிக்க வார்த்தைகளால் பொருள் பொதிந்த வார்த்தைகளால் அழகழகான வார்த்தைகளால் தேடித் தேடி உன்னை பற்றி அழகான கவிதை ஒன்றை படைத்துவிட்டோம் என்று ஆனந்தக் கூத்தாடி நீ வாசிக்கக் கொடுப்பேன் வாசித்து முடிக்கையில் உன்னில் உதிக்கும் சிறு மின்னல் புன்னகையில் சகலமும் சரிந்து உன் பாதங்களில் பணிந்துவிடும். உலகின் எந்த அழகை அருகே வைத்தாலும் நீ பூக்கும் புன்னகையே எல்லாவற்றையும் விட அழகாய்த் தோன்ற உன்னைவிட அழகான கவிதை எழுத எங்கிருந்து வார்த்தைகள் தேட. இருப்பினும் மீண்டும் தேடலை தொடர்கிறேன் மீண்டும் ஒரு அழகான கவிதைக்காய் அதனினும் அழகான நின் புன்னகைக்காய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக