சில கவிதைகளை
முடிக்கும் தருணங்களில்
மனம் நொந்ததுண்டு
அவளுக்கு கொஞ்சமேனும்
தமிழ் படிக்க
தெரிந்திருந்திருக்கலாம் என்று.
எத்தனையோ இதழ்களால்
வாசித்து நேசிக்கப்பட்டு
இதயத்தில் அரியணையிட்ட
அந்த வார்த்தைகள் எல்லாம்
அவற்றின் பிறவிப்பயனை
அடையவே இல்லை என்பது
எனக்கும் அந்த கவிதைக்கும்
மட்டுமே தெரிந்திருக்கும்.
நின் இதழ் தழுவா
வார்த்தைகள் எல்லாம்
பிறந்தும் உயிர்ப்பில்லா
பிண்டங்களாய் என்
இதயப் பிரதேசத்தில்
சமாதியாக்கப் பட்டதென்று
அறிவாயோ என் காதலே....
:- கௌதமன் ராஜகோபால்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக