ஞாயிறு, 19 ஜனவரி, 2014

தேவதையின் வரவுக்காய்!!




சில நேரங்களில் நான் சிந்தப்பதுண்டு...
என்னை காதிலிப்பதாய் வந்தவர்களை எல்லாம்
நிராகரித்ததன் பின் புலம் என்ன என்று.?
இன்றும் நிச்சயமற்றுத் தான் இருக்கிறேன்.
என் காதலை எதிர்பார்த்தவர்களில்
பலரும் என் அன்பிற்கு உரியவர்கள்தான்
பின் ஏன் நான் ஆர்வம் காட்டவில்லை.
சிறு சிந்தனைக்கும் இடமளியாமல்
மறுதளித்ததின் மறுபக்கம் என்னவாய் இருக்கும்.
சிந்திக்கும் போதெல்லாம் என் மனம்
இறுதியாய் நிற்கும் இடம் வெறுமை.
ஆம் வெறுமைதான், வேறொன்றும் இல்லை.
என்னில் காதல் இல்லாமல் இல்லை.
எனக்குள் காதலுக்கான ஒரு சாம்ராஜ்யமே
உண்டாக்கி வைத்துள்ளேன்.
அதன் அரியணை ஒருவளுக்கே.
அதை ஆள வேண்டிய தேவதையை
இன்னும் நான் கண்டதாய் நினைவில்லை.
காத்திருக்கிறேன் இதயம் வழிந்து
கண்ணில் கசியும் காதலுடன்.
அவளை கண்ட மாத்திரத்தில்
என் சாம்ராஜ்யம் இரட்சிக்கப்படும்.
அப்படி ஒரு சந்திப்பிற்காய் காத்திருக்கையில்
இவர்கள் காதல் மொழி பகர்வுகள்
என்னை என்ன செய்துவிடும்.
மென்மையான புன்னகையுடன்
காதல் சொல்ல வந்தவர்களை
காயம் செய்யாமல் கடந்து விடுகிறேன்.
என் நெஞ்சம் நிறைந்த காதலே
கொஞ்சம் பொறுத்திரு அமைதியாய்.
தேவதை எந்நேரமும் வரக்கூடும்
வரவேற்க தயாராயிரு.
ஒரு காதல் சாம்ராஜ்யம்
அதை ஆளும் தேவதைக்காய் காத்திருப்பதை
அவளும் உணர்ந்திருக்கக் கூடும்.
அவள் அமரும் அரியணை
தெய்வத்தின் கருவரைபோல்
என்றும் பூஜிக்கப் படட்டும்.
அவள் இல்லாதிருக்கும் சமயத்திலும். 

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

காதலியின் அமரும் இடத்தை உவமித்த விதம் நன்று
அவள் அமரும் அரியணை
தெய்வத்தின் கருவரைபோல்
என்றும் பூஜிக்கப் படட்டும்.
அவள் இல்லாதிருக்கும் சமயத்திலும்

சிறப்பான கருத்தாடல் மிக்க வரிகள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
காதலி அமரும் இடத்தை கருவரைக்கு உவமித்த விதம் சிறப்பான வரிகள்
வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-