செவ்வாய், 10 பிப்ரவரி, 2015



அதிகாலை வேளை
சிணுங்கும் மழை
சில்லிடும் தென்றல்
சிலிர்ப்பூட்டும் சாரல்
பறவைகளின் முனகல்
பாதி விடிந்த இருள்
ஜன்னலோர இருக்கை
ஒரு குவளைத் தேநீர்
மழை நனைந்து
நீர் வடிக்கும் நந்தவனம்
மடி அமர்ந்து தலை கோதும்
உன் காதல் ஸ்பரிசம்
எத்தனை இன்பம் இதில்.
எத்தனை காதல் இதில்.
இந்நிமிடம் இப்படியே
நீண்டுவிடக் கூடாதா?
இவ்வாழ்வு இப்படியே
முடிந்துவிடக் கூடாதா??
என் அன்பு மழையே நீ
இங்கேயே இருந்துவிடேன்
என் வீட்டில் ஒரு அங்கமாய்.
என் கட்டுப்பாடுகளற்ற
கனவுக் காதலின் காரணியாய்.
எல்லைகளற்ற என் காதல்
கடலில் ஓர் ஓயாத புயலாய்..


:- கௌதமன் ராஜகோபால்

கருத்துகள் இல்லை: