நீ வசிக்கும் தெருவின் எல்லா நுழைவாயில்களிலும் இப்படித்தான் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.. "வாலிபர்கள் கவனமாக செல்லவும் இதயம் தொலையும் பகுதி இது. தொலையும் இதயங்களுக்கு இங்கு வாழும் தேவதை பொறுப்பல்ல."
நீ எப்பொழுதேனும் எனது கவிதைகளை வாசிக்க நேர்ந்தால் அறிந்துகொள்வாயா? உன்னைப் பார்க்கும்போதெல்லாம் ஊமையாகிப்போன ஒருவன் உன்னுடன் பேசமுடியாமல் போன வார்த்தைகளில் சிலவற்றை இங்கே உதிர்த்திருக்கிறான் என்று.
என் கனா கானகங்களில் நிறைந்து கிடக்கும் அடர்ந்த மௌனத்தின் அத்தனை துகல்களிலும் உன் சப்தங்கள் மட்டுமே நிசப்தமாய் ஒலித்து என்னை தாளாட்டி கொண்டிருக்கிறது. பூவின் இதழ் கருகாமல் பனி திருடும் கிரணங்கள் போல நான் அறியாமல் என் மனம் திருடிய மயிலே, என் உறக்கங்கள் உன் மடிமீது. கனவல்ல இது காதல்.