புதன், 4 மே, 2011

கனவல்ல நிஜம்!!!


இமைகள் திறந்துதான் கிடக்கிறது ,
விழிகள் ஏனோ இறந்து கிடக்கிறது...
கனவுகள் களைவது கண்வழி தெரிவதால்,
நினைவுகளில் நடப்பவை நிழலாய் தெரிகிறது..

கண்ணீர்!!!


கண்கள் சிந்துவது
கண்ணீர் மட்டுமல்ல,
சில நேரங்களில்
வாழ நினைத்த வாழ்க்கையும் கூட.
கற்றுக்கொண்டிருக்கிறேன்
நினைத்ததை வாழ முடியாதபோது
விதித்ததை வாழ..